Welcome

Welcome to the Tamil blog. Thank you for visiting

Saturday, 25 November 2017

என் நண்பன் தனிமை

தனிமை எனது மிகச்சிறந்த நண்பன்.
என்னை விட்டு பிரிய மனமில்லாமல் என்னோடு சேர்ந்தே பயணிக்கிறது.

கண்ணீரின் சோகம்

இருள் நீங்கும் நேரம்
ஏனோ மனதிலே காயம்
விழி யோரும் தேங்கும்
சிறு கண்ணீரின் சோகம்...

என் கனவு ஆனால் நிஜம்

நிஜம் நிழலாகவும்
நிழல் நிஜமாகவும்
தோன்றுகிறது
நீ இல்லாமல் போனதால் .
எனக்கு இந்த நிழல் வாழ்க்கையே பிடிக்கிறது உன்னுடன் வாழ்வதால் .

கனவிலும் சரி,
நம் நினைவிலும் சரி,
இன்றும் என்னுடன் நீ

Saturday, 18 November 2017

என் தமிழ்

நான் சுவாசிப்பதற்காக உன்னை நேசிக்க வில்லை ,
உன்னை நேசிப்பதற்காகவே சுவாசித்து  கொண்டிருக்கிறேன்

Thursday, 16 November 2017

வாழ்க்கைப் பயணம்

என்னுடனான வாழ்க்கை பயணத்தில் முடிகின்ற பாதை எனதாக இருக்கலாம்  சற்றே திரும்பிப்பார் அது உன் வாழ்வின் தொடக்கமாக இருக்கட்டும் ..

ஒரு முடிவில்தான் இன்னொரு தொடக்கம் இருக்கும்..
என்றும் அன்புடன் கவி😘

Tuesday, 14 November 2017

காதல் வலி

உயிர் போகும் வலியை கூட அனுபவித்திருக்கிறேன் ஆனால் என் உயிர் போன பின்பு இருக்கும் வலியை தான் என்னால்  ஏற்க முடியவில்லை .

சாதி என்னும் சாக்கடை

மீண்டும் ஒருமுறை சாதி என்னும் சாக்கடை யோடு என்னிடம் வந்துவிடாதீர்கள் அது உறவாய் இருந்தாலும் சரி உயிராய் இருந்தாலும் சரி அன்றே வெறுத்து விடுவேன் அந்த உறவை